வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தி கோட்.
சயின்ஸ் பிக்ஷன் பாணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, லைலா, சினேகா உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள், நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி அன்று, இந்த திரைப்படம், திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தை இன்று சென்சார் அதிகாரிகள் பார்த்துள்ளனர். படத்தை பார்த்த பிறகு, இப்படத்திற்கு U/A என்ற சான்றிதழை அவர்கள் வழங்கியுள்ளனர். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, இயக்குநர் வெங்கட் பிரபுவும், தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.