பொதுவாக வித்தியாசமான திரைப்படங்களில் நடிக்காமல், தனக்கு எது உகந்ததாக உள்ளதோ, அது மாதிரியான திரைப்படங்களில் மட்டும் நடித்து வருபவர் விஜய்.
ஆனால், சமீப காலங்களாக, மாஸ்டர், லியோ, பீஸ்ட் மாதிரியான வித்தியாசமான களங்களை, அவர் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது தி கோட் படத்தில், விஜய் நடித்து முடித்துள்ளார்.
இப்படம், வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி அன்று, ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் டிரைலர், வரும் 19-ஆம் தேதி அன்று, ரிலீஸ் ஆகும் என்று தகவல் ஒன்று கசிந்திருந்தது.
ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்படி, இப்படத்தின் டிரைலர் வரும் ஆகஸ்டு 15-ஆம் தேதியே ரிலீஸ் ஆக உள்ளதாம்.