ஓடும் பேருந்தின் முன் சக்கரம் கழன்றதால் பரபரப்பு – உயிர் தப்பிய 40 பயணிகள்

சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி 40 பயணிகளுடன் தனியார் பேருந்து சென்றுக் கொண்டிருந்துள்ளது. அப்போது திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பங்களாமேடு என்ற இடத்தில் பேருந்தின் முன் சக்கரம் கழன்ற நிலையில் ஓடியுள்ளது.

இதனை அறிந்து சுதாரித்துக் கொண்ட பேருந்து ஓட்டுநர் அரவிந்தன் (49) உடனடியாக பேருந்தை ஓரங்கட்டி பார்த்தபோது, முன் சக்கரத்தின் போல்டுகள் ஒவ்வொன்றாக கழன்று, கடைசியில் இரண்டு போல்டில் சக்கரம் இயங்கியுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக முன் சக்கரத்தை கழற்றி தயார் நிலையில் வைத்திருந்த போல்டுகளை பொருத்தி பேருந்தை இயக்கி சென்றுள்ளார்.

ஆபத்தை முன்கூட்டியே அறிந்து பேருந்தின் முன் சக்கரத்தை கழட்டி மாட்டியதால் 40 பயணிகள் அதிர்ஷ்டசமாக உயிர் தப்பினர்.

RELATED ARTICLES

Recent News