ஓடும் பேருந்தில் ஓட்டுனர் மயக்கியதால் சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
ஈரோடு பகுதியைச் சேர்ந்த செந்தில்ராஜ் வயது (48) இவர் ஈரோடு காசிபாளையம் அரசு பணிமனை டிப்போவில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் இன்று அதிகாலை 5: 50 மணிக்கு ஈரோடு பஸ் நிலையத்திலிருந்து 22 பயணிகளை ஏற்றுக் கொண்டு சேலம் நோக்கி சென்று கொண்டு இருந்துள்ளார். காலை 6.30 மணிக்கு சங்ககிரி வி. என் பாளையம் மாரியம்மன் கோவில் என்ற இடத்தில் வந்த பொழுது ஓட்டுனர் செந்தில் ராஜா உடல்நிலை குறைவால் திடீரென மயக்கம் அடைந்துள்ளார்.
அப்போது பேருந்தை நிறுத்த முயன்றும் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது.
இதில் பேருந்தில் முன் பகுதி முழுவதும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் பஸ் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
உடனே மயக்கம் அடைந்த செந்தில் ராஜாவை சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்த்து முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை நடுவே நின்று இருந்த பேருந்தை அப்புறம் படுத்தி பயணிகளை மாற்று பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசு பேருந்து விபத்துக்குள்ளாகிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.