மும்பையில் உள்ள மும்ப்ரா பகுதியில் சாலையில் தாயுடன் 3 வயது சிறுமி சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென 5-வது மாடியில் இருந்து சிறுமியின் தலையில் நாய் ஒன்று விழுந்தது. இதில் 3 வயது சிறுமி மயக்கம் அடைந்தார்.
அதிர்ச்சி அடைந்த தாய், தகறியபடி சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து நாய் தவறுதலாக விழுந்ததா, அல்லது வேண்டுமென்றே தூக்கி எறியப்பட்டதா, என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.