பரமக்குடியில் ஜவுளி கடை வாசலில் குடும்பத்தினருடன் நின்று கொண்டிருந்த சிறுமியின் காலை கடித்து கவ்விய நாயின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பெரிய கடை வீதியில் அமைந்துள்ள காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள ஜவுளி கடை ஒன்றின் வாசலில் தனது குடும்பத்தினருடன் ஒரு சிறுமி நின்று கொண்டிருந்தார்
அப்போது அந்த வழியில் சென்ற கழுத்தில் கயிறு கட்டிய வளர்ப்பு நாய் ஒன்று சிறுமியின் காலில் கடித்துக் குதறியது.
இதை கண்ட குடும்பத்தினர் நாயிடம் இருந்து சிறுமியை மீட்டனர் அதிர்ச்சிகரமான இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது
இந்த சிசிடிவி காட்சிகளை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து பரமக்குடி யில் தெருநாய்கள், வளர்ப்பு நாய்களை நகராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று இருவர் நாய் கடிக்கு ஆளாகி பரமக்குடி அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.