பிஸ்கட் போட்ட சிறுவனைக் கடித்து குதறிய நாய்!

சென்னையில் பிஸ்கட் போட்ட சிறுவனை தெருநாய் ஒன்று கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள எல்லையம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் பாலசுப்பிரமணியம் என்பவரின் ஆறு வயது மகன் நேற்று இரவு வீட்டு வாசலில் தெரு நாய்க்கு பிஸ்கட்டுகளை வழங்கியுள்ளார்.

அப்போது திடீரென அந்த தெரு நாய் சிறுவன் மீது பாய்ந்து கடித்துக் குதறியுள்ளது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர், சிறுவனை மீட்டு எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

RELATED ARTICLES

Recent News