நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில் ஆளும் கட்சியான திமுக, தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை குழு, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கிட்டு பேச்சுவார்த்தைக்கான குழு என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக குழுக்களை அமைத்து முனைப்புடன் தயாராகி வருகிறது.
இதையடுத்து திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி எம்.பி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை குழு கூட்டம் இன்று மதியம் 12 மணிக்கு நடைபெற உள்ளது. தேர்தல் அறிக்கை குழுவில் டி.கே.எஸ் இளங்கோவன், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி ராஜா, மேயர் பிரியா உள்பட 11 பேர் இடம்பெற்றுள்ளனர்.