போலீஸ் விசாரணைக்கு பயந்து தப்பி ஓடிய இளைஞர் உயிரிழப்பு!

கோவை பந்தய சாலை பகுதியில் ஒண்டிபுதூரை சேர்ந்த விஷ்வா மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் நடந்து சென்று உள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் இராமநாதபுரம் போலீசார் மூவரையும் பிடித்து விசாரித்து வந்த நிலையில் விஷ்வாவின் செல்போனையும் பறிமுதல் செய்து உள்ளனர். இதில் விசாரணைக்கு பயந்து ஓடிய விஷ்வா கோவை வாளாங்குளத்தில் குதித்து தப்ப முயன்றதில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து பந்தய சாலை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விஷ்வாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்த விஷ்வாவின் நண்பர்கள் இருவரிடம் இராமநாதபுரம் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் அவர்கள் இருவரும் கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் என தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News