இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்றுள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன், நேற்று (புதன்கிழமை) இஸ்ரேல் சென்று அந்நாட்டு பிரதமர், அதிபர் உள்ளிட்டோரைச் சந்தித்து அமெரிக்காவின் ஆதரவை நேரில் தெரிவித்தார்.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், இஸ்ரேல் சென்றுள்ளார். தனது இஸ்ரேல் வருகை குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “துக்கத்தில் உள்ள நாடான இஸ்ரேலில் நான் இருக்கிறேன். நான் உங்களுடன் (இஸ்ரேலிய மக்கள்) வருந்துகிறேன். பயங்கரவாதம் என்ற தீமைக்கு எதிராக உங்களுடன் நிற்கிறேன் – இப்போதும் எப்போதும்” என்று தெரிவித்துள்ளார்.