விநாயகர் சிலையை கரைக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

மேலூர் அருகே விநாயகர் சிலையை கரைக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தனார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அலங்கம்பட்டியைச் சேர்ந்த சிறுவன் தர்நேஷ். இவர் தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி வீட்டில் வைத்து வழிபட்ட களிமண்ணால் ஆன சிறிய விநாயகர் சிலையை, சைக்கிளில் வைத்து அப்பகுதியில் உள்ள பெரியகுளம் கண்மாயில் கரைக்க சென்றுள்ளார்.

அப்போது, சிறுவன் தர்நேஷ் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிருக்கு போராடிய நிலையில், அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு அருகில் உள்ள கருங்காலக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுச் சென்றுள்ளார்.

அங்கு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில், சிறுவன் ஆபத்தான நிலையில் இருப்பதால் மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில், அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் வரும் வழியில் உயிரிழந்தது விட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இதுகுறித்து தகவலறிந்த கொட்டாம்பட்டி காவல்துறையினர் சிறுவனை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News