பெற்றோர்கள் கண்டித்ததால் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சிறுவன்!

சென்னை தாம்பரம் அடுத்த படப்பை அருகே ஆரம்பாக்கம் ஆதிபராசக்தி கோவில் தெருவை சேர்ந்தவர் ரிச்சர்ட் (வயது 39) இவரது மனைவி மீனா (வயது 36) இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்களின் மகன் தோனி (12) படப்பை அருகே உள்ள ஆத்தனஞ்சேரியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் தோனி சரியாக படிக்காமல் இருந்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி நேற்று பள்ளிக்கு செல்ல மாட்டேன் என கூறியதால் பெற்றோர் அவனை கண்டித்ததோடு இன்று ஒரு நாள் மட்டும் லீவு எடுத்துக்கொள் ஆனால் நாளை முதல் ஒழுங்காக பள்ளிக்கு செல்ல வேண்டும்.

எனக் அறிவுரை கூறியதோடு ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வை எனக்கூறி காசு கொடுத்து விட்டு இருவரும் வேலைக்குச் சென்றுள்ளனர்.

இதையடுத்து ரேசன் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வீட்டில் வைத்துவிட்டு மீதி இருந்த காசை எடுத்துக் கொண்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று படப்பை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்து வீட்டில் உள்ள கழிவறையில் காமாட்சி விளக்கை ஏற்றி வைத்துவிட்டு தனக்குத்தானே பெட்ரோலை ஊற்றியுள்ளார். அப்போது ஏற்கனவே எறிந்து கொண்டிருந்த காமாட்சி விளக்கின் நெருப்பு அவர் மீது பட்டு தீப்பிடித்து எறிந்தது.

இதனால் வலி தாங்க முடியாமல் அலறி அடித்தபடி கழிவறையில் இருந்து வெளியே வந்தார். சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த அக்கம்பக்கத்தினர் போர்வையால் மூடி அவரை மீட்டனர். இருப்பினும் 90% தீக்காயங்களுடன் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சென்னை கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News