தங்கலான் படத்தின் பரிதாப நிலை! துரத்தியடிக்கும் சினிமா?

ஒரே வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதற்காக, விக்ரம் பல ஆண்டுகளாக போராடி வருகிறார். ஆனால், அவரது திரைப்படங்கள் பெரும்பாலும் தோல்வியையே தழுவி வருகின்றன.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிரபல இயக்குநர் பா.ரஞ்சித்துடன் விக்ரம் கூட்டணி வைத்தார். இப்படத்தின் போஸ்டர், க்ளிம்ஸ் வீடியோக்களை பார்த்த ரசிகர்கள், மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.

எனவே, படத்தின் ரிலீஸ் எப்போது என்று காத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இப்படம் முதலில் மார்ச் மாதம் இறுதியில் ரிலீஸ் இருந்தது. சில பிரச்சனையால், அப்படத்தின் ரிலீஸ் தேதி, ஜூலைக்கு தள்ளிப்போனது.

தற்போது அந்த மாதத்தில் பல்வேறு பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆவதால், ஆகஸ்டு மாத இறுதியில், படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக, தகவல் கசிந்துள்ளது. இவ்வாறு படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுக் கொண்டே இருப்பதால், ரசிகர்கள் சோர்வு அடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News