வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் தி கோட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
சயின்ஸ் பிக்ஷன் பாணியில் தயாராகி வரும் இந்த திரைப்படம், பல்வேறு நாடுகள், மாநிலங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தி கோட் படத்தின் ஷூட்டிங் தற்போது, கேரள மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விஜய் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை சந்திக்க இருப்பதாக, கேரள ஊடகங்களில் தகவல் கசிந்துள்ளது.
இந்த சம்பவம் நடக்கும்போது, அது தமிழ் மற்றும் மலையாள ஊடகங்களில் தலைப்பு செய்தியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.