ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாக உள்ளது.
இப்படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
நாளை மாலை 6 மணி முதல் D.I.S.C.O 🔥#Thalaivar171 @rajinikanth sir @anirudhofficial @anbariv @girishganges @philoedit @sunpictures pic.twitter.com/v1LIZzpnBX
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 21, 2024
ரஜினியின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் ‘சூட்டிங்’ வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தின் ”டைட்டில்’ நாளை ( 22 – ந் தேதி) வெளியாக உள்ளது.தலைவர் – 171 படத்துக்கு ‘டைட்டில்’ கழுகு, ராணா, தங்கம் அல்லது கடிகாரம் என 4 பெயர்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. இந்த 4 ல் ஒன்றுதான் இந்த படத்தின் டைட்டிலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.