பார்த்திபன் இயக்கி நடித்துள்ள த்ரில் திரைப்படம் தான் டீன்ஸ். இந்த திரைப்படத்திற்கான டிக்கெட், முதல் 3 நாட்களுக்கு மட்டும், 100 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்படும் என்று பார்த்திபன் கூறியிருந்தார்.
இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், அவரது புதிய முயற்சிக்கு தங்களது பாராட்டுக்களை கூறி வந்தனர்.
ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்படி, சென்னையில் உள்ள ஒருசில திரையரங்குகளில் மட்டும் தான் 100 ரூபாய்க்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகவும், மற்ற திரையரங்குகள் அனைத்திலும், வழக்கம் போல்தான் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகவும், கூறப்படுகிறது.
பார்த்திபனுக்கு ஆதரவு அளிக்கலாம் என்று திரையரங்கிற்கு சென்ற ரசிகர்களுக்கு, இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.