பாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். இவரது மகளான ஆலியா காஷ்யப், தற்போது Young, Dumb And Anxious என்ற Podcast-ஐ நடத்தியுள்ளார்.
அதில், தனக்கும், பிரபல இயக்குநர் இம்தியாஸ் அலியின் மகள் இடா அலிக்கும் இடையே உள்ள நட்பு குறித்தும், தங்கள் இருவரும் சிக்கிக்கொண்ட இக்கட்டான சூழ்நிலை குறித்தும் பேசியுள்ளார்.
அதாவது, “எங்களுடைய குடும்பமும், இடாவின் குடும்பமும், ஒரே கட்டிடத்தில் தான் வசித்து வந்தன. ஒருமுறை, வெளியே செல்ல நேர்ந்ததால், இடாவின் பெற்றோர் அவளை, எங்களது வீட்டில் விட்டுவிட்டு சென்றனர். அப்போது நாங்கள் இருவரும் விளையாடிக் கொண்டு இருந்தோம்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “எங்களது வீட்டில் முன்பு வேலை செய்துக் கொண்டிருந்த நபர் ஒருவர், வீட்டில் கொள்ளையடிக்க முயற்சி செய்தார். அப்போது, அவர் என்னையும், இடா அலியையும், பணையக்கைதியாக வைத்துக் கொண்டார்.
நாங்கள் அந்த சமயத்தில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தோம். இதனை அறிந்த எங்கள் இருவரின் பெற்றோர்களும், அதிர்ச்சி அடைந்தனர். அந்த சம்பவத்திற்கு பிறகு, நாங்கள் இருவரும் மிகவும் பிணைப்புள்ள உறவாக மாறிவிட்டோம்” என்று கூறினார்.