விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் திருக்குறிப்பு தொண்டர் நகர் பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளிகளான ரஞ்சித் (42) அருண்குமார் மற்றும் முரளி ஆகிய மூன்று நண்பர்களும் (செப்.12) நேற்று மாலை மது குடிக்க வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.
இரவு வெகு நேரமாகிய ரஞ்சித் வீடு திரும்பாததால் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்காததால் உறவினர்கள் விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் நள்ளிரவில் முரளி, அருண்குமாரை போலீசார் அழைத்து விசாரனை செய்ததில் சித்தேரிக்கரை பகுயியில் உள்ள டாஸ்மாக்கில் மது வாங்கி அருகே உள்ள முட்புதர் பகுதியில் குடித்த போது நண்பர்கள் மூவருக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்த சண்டையில் ஆத்திரமடைந்த அருண்குமார் முரளியோடு சேர்ந்து ரஞ்சித்தை அடித்து கீழே தள்ளி தலையில் கல்லை போட்டு கொலை செய்து அங்குள்ள முள் புதரில் உடலை தூக்கி விசிவிட்டு சென்றதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இன்று அதிகாலை சம்பவ் இடத்திற்கு சென்ற போலிசார் முட்புதரில் வீசப்பட்ட ரஞ்சித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள விழுப்புரம் தாலுக்கா காவல்துறையினர் கொலை செய்த அருண்குமார் (32), முரளி (27) ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
இதில் அருண்குமார் மற்றும் முரளி ஆகியோர் தங்களது சொந்த வீட்டின் கதவுகளை உடைத்து புடவைகள், வீட்டு உபயோக பொருட்களை திருடிசென்று விற்று அதில் மது வாங்கி குடித்துள்ளது தெரியவந்துள்ளது. குடிக்க அழைத்து சென்ற நண்பனை போதையில் நண்பர்களே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.