நடிகை ஜோதிகாவும், மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும், காதல் என்று திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.
தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை இயக்கிய ஜியோ பேபி தான், இந்த படத்தையும் இயக்கி வருகிறார். இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சூர்யா சென்றுள்ளார்.
அப்போது, படக்குழுவினர்கள் அனைவருக்கும், தனது கையாலே பிரியாணி சமைத்து கொடுத்துள்ளார். நடிகர் அஜித்தும், தனது படக்குழுவினருக்கு பிரியாணி சமைத்து கொடுப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.