திராணி, தைரியம் இருந்தால் மட்டும் படம் எடுங்க…கடுப்பான சூர்யா ரசிகர்கள்

சூர்யா நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. சூர்யாவின் 42 வது படமான இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக இவர் நாயகனாக நடித்த படமும் வெளியாகவில்லை. இதனால், சூர்யாவின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். இதனால்,கங்குவா எப்போது வரும் என அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

கங்குவா படம் குறித்த எந்த அப்டேட்டையும் படக்குழு இதுவரை வெளியிடவில்லை. இதனால் கடுப்பான சூர்யாவின் தீவிர ரசிகர்கள் திண்டுக்கலில் கண்டன போஸ்டரை ஒட்டி உள்ளனர்.

அந்த போஸ்டரில் கங்குவா ரிலீஸ் தேதி எப்போ வரும். எங்களுக்கு அப்டேட் வேண்டும். படத்தை எடுத்து சொன்ன தேதியில் வெளியிட திராணியும், தைரியமும் இருந்தால் மட்டும் படத்தை தயாரியுங்கள். நீங்க உங்க தயாரிப்பு நிறுவனத்தை வச்சு என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க. எங்க அண்ணனை விட்டுருங்க என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

RELATED ARTICLES

Recent News