சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!! – உச்ச நீதிமன்றம் உத்தரவு

பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். பின்னர், அவரிடம் கஞ்சா இருந்ததாக குண்டர் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 9ஆம் தேதி ரத்து செய்தது.

இதனைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்டபோது சவுக்கு சங்கரிடம் கஞ்சா இருந்ததாக மீண்டும் குண்டர் சட்டம் பதியப்பட்டது. இதற்கு எதிராக, சவுக்கு சங்கரின் தாயார் கமலம் சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

விசாரணையில், தமிழ்நாடு அரசு சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட குண்டர் சட்டத்தை திரும்பப் பெற்றுள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டு குண்டர் சட்டத்தை ரத்து செய்து, வழக்கை முடித்து வைத்தது. வேறு எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லாவிட்டால், சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கலாம் என உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News