பாஜக அரசியல் வியூகத்தில், நடிகர்களுக்கும், பிரபலங்களுக்கும் எப்போதும் தனி இடம் உண்டு. இதனால், பிரபலங்களுக்கு பதவி வழங்குவதையும், அவர்களை தங்களுடைய கட்சியில் இணைத்துக் கொள்வதையும் அவர்கள் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது பிரபல நடிகர் ஒருவர் பாஜகவில் இணைய உள்ளதாக, தகவல் கசிந்துள்ளது. அதாவது, தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று கூறப்படுபவர் சிரஞ்சீவி.
2008-ஆம் ஆண்டு முதல் ஆந்திரா அரசியலில் ஈடுபட்ட இவர், பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை தொடங்கியிருந்தார். அதன்பிறகு, சில வெற்றிகளை பார்த்த சிரஞ்சீவி, முதலமைச்சர் ஆவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், உட்கட்சி பூசல் காரணமாக, கட்சியை காங்கிரஸில் இணைத்த அவர், மத்திய அமைச்சர் பதவியை பெற்றார். பின்னர், 2014-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு பிறகு, அரசியலில் இருந்து விலகினார்.
இந்நிலையில், இவருக்கு பாஜக தலைமையிலான அரசு, மாநிலங்களவை எம்.பி பதவியை வழங்க இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், அவர் பாஜக இணைய இருப்பதாக, தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில், பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.