மதுரை தெப்பக்குளத்தில் உள்ள முக்தீஸ்வரர் கோயிலில் சூரியக்கதிர் நேரடியாக கருவறையில் விழுந்து இறைவனை தரிசிக்கும் நிகழ்வு இன்று தொடங்கியது. இதையொட்டி இன்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இந்திரனுக்கு சுவாமி சாபவிமோசனம் கொடுத்ததால் தஷ்யாயனம் என்று சொல்லக்கூடிய சூரியஒளி, வடபுறமாக இருந்து பாதங்களில் பட்டு மேல் எழுந்து, தெற்கு நோக்கி நகரும் நிகழ்வு இதுவாகும் என்பது ஐதீகம்.
செப்.19ம் தேதி முதல் செப்.30ம் தேதி வரை, காலை சுமார் 6.15 மணிக்கும், 6.50 மணிக்கு என 2 முறை இது நடைபெறும்.