அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ள இந்த படத்தின் மீது, பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக, புக் மை ஷோ என்ற டிக்கெட் புக்கிங் தளத்தில், 3 லட்சத்திற்கும் அதிகமானோர் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்த படத்தை விட, சன்னி லியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் படத்திற்கு, 4 லட்சம் பேர் ஆர்வம் தெரிவித்துள்ளனர். அதாவது, அஜித்தின் படத்தை விட, சன்னி லியோன் படத்திற்கு தான் ரசிகர்கள் அதிகம் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.