சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு பெய்த திடீர் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, ஆவடி, திருமுல்லைவாயில், பாரிவாக்கம், செம்மரம்பக்கம், காட்டுப்பாக்கம் போன்ற பல்வேறு பகுதியில் கன மழை பெய்தது.
அதே போல் அம்பத்தூர், பாடி, கொரட்டூர், முகப்பேர், மதுரவாயல், வளசரவாக்கம், போரூர் போன்ற பகுதிகளிலும் மழை பெய்தது.
காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் நள்ளிரவில் பெய்த திடீர் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலையில் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். எனினும் கனமழை எதிரொலியாக புறநகரில் திருமுல்லைவாயில் சுப்பிரமணி நகர் சுற்றுப்பகுதியில் நான்கு மணி நேரத்திற்கு மேலாக மின் சேவை பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.