மாணவன் தற்கொலை: 2 மாதங்களுக்கு பிறகு வெளியான அதிர்ச்சி தகவல்!

பூந்தமல்லி அடுத்த சென்னீர் குப்பம் பகுதியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

பிரேத பரிசோதனையின் போது மாணவனின் உடலில் அதிக அளவில் காயங்கள் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

மேலும் அவரது வீட்டில் இருந்து டைரி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டு பார்த்த போது அதில் சூர்யா என்ற நபரின் பெயர் எழுதி வைத்திருந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் விசாரித்தபோது சூர்யா தலைமறைவானார் தலைமுறைவாக இருந்த சூர்யாவை தீவிரமாக தேடி வந்த நிலையில் போலீசார் கைது செய்து விசாரித்த போது அதிர்ச்சி தகவல் வெளியாகின.

தற்கொலை செய்து கொண்ட மாணவன், சூர்யா மற்றும் 17 வயது சிறுவன் என மூன்று பேர் இடையே ஓரினச்சேர்க்கையில் இருந்து வந்ததாகவும் ஒரு கட்டத்தில் சூர்யாவுடன் ஓரினச்சேர்க்கையில் அந்த மாணவன் ஈடுபசுவதை தவிர்த்து வந்த நிலையில் அடிக்கடி சூர்யா அந்த மாணவரிடம் சென்று தன்னுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வேண்டும் எனவும் இல்லை என்றால் அவரது குடும்பத்தில் உள்ள பெண்களின் புகைப்படங்களை சமூக வலை தளத்தில் பரப்பி விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது இதையடுத்து மாணவன் தற்கொலைக்கு காரணமான சூர்யா மற்றும் 17 வயது சிறுவன் உட்பட இரண்டு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News