சுதா கொங்காரா இயக்கத்தில் புறநானூறு என்ற படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் முதலில் நடிகர் சூர்யா நடிக்க இருந்தார்.
ஆனால், சில பிரச்சனைகளின் காரணமாக அவர் விலகியதால், தற்போது சிவகார்த்திகேயன் அந்த படத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில், இந்த படத்தில், தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிகையாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர், நடிகர் விஜயின் தி கோட் படத்தில், மட்ட பாடலில் நடனமாடுவதற்கு, அவருக்கு வாய்ப்பு வந்தது.
ஆனால், அந்த வாய்ப்பை மறுத்த ஸ்ரீ லீலா, தமிழ் சினிமாவில் கதாநாயகியாக தான் அறிமுகம் ஆவேன் என உறுதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.