ஜவான் படத்தின் சாதனையை முறியடித்த புதிய திரைப்படம்?

அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் உருவான திரைப்படம் ஜவான். நயன்தாரா, விஜய்சேதுபதி ஆகியோரும், முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ஆயிரம் கோடி ரூபாய்-க்கு மேல் வசூலித்த இந்த திரைப்படம், அதிகம் வசூலித்த திரைப்படம் என்ற சாதனையையும் நிகழ்த்தியிருந்தது. ஆனால், தற்போது, இந்த சாதனையை புதியதாக ரிலீஸ் ஆன ஸ்ட்ரீ 2 என்ற திரைப்படம் முறியடித்துள்ளது.

அதாவது, கடந்த ஆகஸ்டு 15-ஆம் தேதி அன்று, ஸ்ட்ரீ 2 என்ற காமெடி ஹாரர் திரைப்படம் ரிலீஸ் ஆகியிருந்தது. பாலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இந்த திரைப்படம், இன்றும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது.

இந்திய அளவில் அதிகம் வசூலித்த திரைப்படம் என்ற பெருமையையும், தற்போது ஸ்ட்ரீ 2 திரைப்படம் பெற்றுள்ளது. அதாவது, ஜவான் படத்தின் சாதனையை ஸ்ட்ரீ முறியடித்துள்ளது. இதுவரை, நெட் கலெக்ஷனாக, ரூபாய் 586 கோடியை, ஸட்ரீ 2 வசூலித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News