தமிழகத்திலிருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள்! – தெற்கு ரயில்வே அறிவிப்பு

தமிழகத்திலிருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் செயல்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் அறிவித்ததாவது: தற்போதுள்ள நிலவரப்படி, அயோத்தி தாம் ரயில் நிலையத்தில் ஒரு நாளைக்கு, 100 ரயில் சேவைகளை இயக்க முடியும்.

அதனால் திருநெல்வேலி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய நகரங்களில் இருந்து அயோத்திக்கு, 34 சிறப்பு ரயில்களை இயக்க, ஐ.ஆர்.சி.டி.சி., திட்டமிட்டுள்ளது. குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த சிறப்பு ரயில்கள், வரும் 29ம் தேதி முதல் பிப்ரவரி 29ம் தேதி வரை இயக்கப்பட உள்ளன. இது குறித்த தகவல் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News