80-களின் காலகட்டத்தில், முன்னணி கதாநாயகனாக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். ஊருக்கே சாப்பாடு போட்ட வள்ளல் என்று பெயர் எடுத்த இவர், திடீரென சினிமாவில் இருந்து விலகி, அரசியலில் காலடி எடுத்து வைத்தார்.
அங்கும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற விஜயகாந்த், நாட்கள் செல்ல செல்ல அரசியலில் பலத்தை இழந்து, தேர்தலில் தோல்வி அடைந்தார்.
இவ்வாறு பல கட்டங்களை கடந்த விஜயகாந்த், இன்று தனது 71-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதன்காரணமாக இன்று தனது தொண்டர்களை அவர் சந்தித்தார்.
அப்போது, உடல் அசைவுகளை தன்னுடைய சொந்த முயற்சியின் மூலமாகவே செய்ய முடியாமல் அவர் இருப்பதை பார்த்த தொண்டர்கள், கண் கலங்கிய நிலையிலேயே கடந்து சென்றனர். இந்த நிலை விரைவில் மாறும் என்றும் கூறி சென்றனர்.