நலன் குமாரசாமி இயக்கத்தில், விஜய்சேதுபதி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, திலக் ஆகியோர் நடிப்பில், ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் சூது கவ்வும்.
இப்படம் வெளியாகி, 11 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது இதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த இரண்டாம் பாகத்தில், மிர்ச்சி சிவா, ராதா ரவி, கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 22-ஆம் தேதி அன்று, வெளியாக உள்ளதாம்.