சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற பேரவை செயலாளர் அலுவலகத்திற்குள் சாரைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதை பார்த்த அதிகாரிகள் அலறியடித்து அங்கிருந்து வெளியே ஓடினர்.
இது குறித்து தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள தீயணைப்புத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பாம்பு பிடிக்கும் கருவிகளுடன் உள்ளே சென்றுள்ளனர்.
அங்கிருந்த குட்டிப்பாம்பு ஒவ்வொரு அறையாக தப்பிச் சென்றது. ஒரு வழியாக அந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். பிடிபட்ட பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.பாம்பு பிடிபட்ட பின்னரே, அங்கிருந்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.