தமிழ் சினிமாவின் நடிப்பு அரக்கனாக வலம் வருபவர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு பிறகு, இவரது மார்கெட் இந்தியா முழுவதும் விரிவடைந்துள்ளது.
இந்நிலையில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா, பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், நடிகர் அஜித் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
அதாவது, “நான் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, மிகவும் மோசமான ஆடை அணிந்திருப்பேன்.
அப்போது, என் தோள் மீது கை போட்டுக் கொண்ட அஜித் சார், நான் தான் அவரது அடுத்து படத்தை இயக்க உள்ளேன் என எல்லோரிடமும் சொல்லி அறிமுகப்படுத்துவார்.
இந்த பெருந்தன்மை எனக்கு நிச்சயம் இல்லை. இந்த சம்பவத்தை பற்றி பேசும்போது, என் கண்கள் கலங்கும்” என்று கூறியுள்ளார். இந்த பேட்டி வைரலாகி வருகிறது.