சித்தார்த்துக்கு வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்! காரணம் என்ன?

பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் சித்தார்த். இந்த படத்திற்கு பிறகு, பெரும்பாலும் தெலுங்கு சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இவர், அங்கு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

சமீபத்தில், மீண்டும் தமிழ் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ள சித்தார்த், கடைசியாக சித்தா என்ற படத்தில் நடித்து கலக்கியிருந்தார். உணர்ச்சிபூர்வமாக இருந்த இவரது நடிப்பு, பலரையும் கண்கலங்க வைத்திருந்தது என்றே கூறலாம்.

தற்போது, நடிப்பு, தயாரிப்பு ஆகிய விஷயங்கள் கவனம் செலுத்தி வரும் சித்தார்த், தனது தனிப்பட்ட விஷயங்களிலும் அதிக கவனத்தோடே இருந்து வருகிறார். அதாவது, இவரம், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் காதலித்து வருகின்றனர்.

இவர்கள் இரண்டு பேருக்கும், சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தற்போது திருமணம் தொடர்பான தகவல் கசிந்துள்ளது. அதன்படி, இவர்கள் இரண்டு பேரும், வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்துக் கொள்ள உள்ளார்களாம்.

RELATED ARTICLES

Recent News