நடிகை, பாடகர், இசையமைப்பாளர் என்று பல்வேறு திறமைகளை கொண்டவர் ஸ்ருதி ஹாசன். இவர், தற்போது பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
இதற்கான ஷூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது. இந்த ஷூட்டிங்கிற்கு, அவர் காரில் சென்றுள்ளார். ஆனால், அப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், காரை அங்கேயே நிறுத்திவிட்டு, ஆட்டோவில் சென்றுள்ளார்.
இதுதொடர்பான வீடியோவை எடுத்துள்ள ஸ்ருதி ஹாசன், அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ, வைரலாக பரவி வருகிறது.