டொனால்டு டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நேற்று (செப்.15) மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல், நவ., 5ம் தேதி நடக்க உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில், துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர். தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், புளோரிடா மாகாணத்தில் தனது வீட்டில் இருக்கும் கோல்ப் மைதானத்தில் டிரம்ப் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவர் வீட்டிற்கு அருகிலேயே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், கோல்ப் கிளப் அருகே, AK-47 துப்பாக்கியுடன் ஓடுவதை கண்ட ரகசிய போலீஸ் அதிகாரிகள் அவரை மடக்கி கைது செய்தனர். அந்த நபர் 58 வயதான ரயான் ரூத் வெஸ்லி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் எதற்கு துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News