சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து, தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பெற்றிருப்வர் ஷீலா ராஜ்குமார்.
இவர், மண்டேலா, திரௌபதி, நூடுல்ஸ் உள்ளிட்ட பல்வேறு படங்களில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இயக்குநர் சோழனை கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்ட இவர், தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், திருமண உறவில் இருந்து நான் வெளியேறுகிறேன். நன்றியும் அன்பும்” என்று கூறியுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.