ஆளவந்தான், ரமணா, பாபா உள்ளிட்ட படங்களின் மூலம், சினிமாவில் பயணத்தை தொடங்கியவர் ரியாஸ் கான்.
வின்னர் படத்தில் கட்டதுரை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர், அதன்பிறகு, பல்வேறு குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
இவரது மகனும், பிக்-பாஸ் போட்டியாளருமான ஷாரிக்கிற்கு வரும் 8-ஆம் தேதி அன்று திருமண நடக்க உள்ளது. இந்நிலையில், திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் தற்போது நடந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில், ஷாரிக், அவரது தந்தை ரியாஸ் கான், தாய் உமா, வருங்கால மனைவி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.