காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த விசூர் கிராமத்தில் ஜூப்ளி அகடாமி சி.பி.எஸ்.சி தனியார் பள்ளி கடந்த ஆண்டு முதல் இயங்கி வந்துள்ளது.
இதில், சுமார் 25 மாணவர்கள் படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்த பள்ளியின் தாளாளர் சகாயராஜ் வயது 51 என்பவர் ஆங்கில இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவரை பாலியல் சீண்டல் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது .
இது குறித்து மாணவன் பள்ளி முடிந்தவுடன் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து மாணவனின் பெற்றோர் பெருநகர் காவல் நிலையத்தில் பள்ளியின் தாளாளர் மீது புகார் தெரிவித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் பெருநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு பள்ளியின் தாளாளர் சகாயராஜை போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், இந்த பள்ளி அனுமதி இல்லாமல் இயங்கி வந்ததாகவும், பள்ளிக்கு அனுமதி பெறும் முயற்சியில் பள்ளி நிர்வாகம் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த பள்ளியில் நடைபெற்ற சம்பவம் செய்தித்தாள்கள் மூலமாக அறிந்து கொண்டு இன்று ஜூப்ளி அகடாமி பள்ளிக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட தனியார் பள்ளி கல்வி அலுவலர் கே. ஜெய்சங்கர் பள்ளிக்கு நோட்டிஸ் ஒட்டி சீல் வைக்கும் பணிகளை மேற்கொண்டார்.