கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜூஜூவாடி பகுதியில்,நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த மகேந்திரன் (42) பேன்சி கடை நடத்தி வருகிறார்.
நேற்று (செப்.20) தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் 8 வயது சிறுமி பள்ளி முடித்து வீடு திரும்பிய போது, ஏற்கனவே அறிமுகமான மகேந்திரன் சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து கடைக்குள் அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இதனால், அழுதவாறு சென்ற சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து சிறுமியின் தாயார் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சிறுமியிடம் அத்துமீறிய கொடூரன் மகேந்திரனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.