மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்: 4 இளம்பெண்கள் மீட்பு!

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம்பெண்களை போலீசார் மீட்டனர்.

கோவை சுக்கிரவார்பேட்டை ஆர்ஜி தெருவில் மசாஜ் சென்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு பாலியல் தொழில் நடப்பதாக ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், ஆர்.எஸ்.புரம் போலீசார் நேற்று அங்கு சென்று சோதனை நடத்தினர். அதில், மசாஜ் பெயரில் அங்கு இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் மசாஜ் சென்டர் நிர்வாகி சேலம் சின்ன திருப்பதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (31) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட புதுச்சேரி, திருச்சி, ஈரோட்டை சேர்ந்த 4 இளம்பெண்களை மீட்ட போலீசார் அவர்களை கோவையில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

RELATED ARTICLES

Recent News