சினிமா நடிகர்கள் அளவுக்கு, சீரியல் நடிகர்களும், தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார்கள்.
அந்த வகையில் பிரபலம் அடைந்தவர் தான், நடிகை ரக்ஷிதா. இவர் தற்போது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நான் இறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், என் வாழ்க்கையை விரும்பும் படி வாழ விடுங்கள் என்றும் கூறியுள்ளார்.
இந்த பதிவில், மரணம் குறித்து அவர் பேசியிருப்பதை பார்த்த ரசிகர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.