வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சீமான் மீது வழக்குப்பதிவு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதியை குறிப்பிட்டு நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அவதூறு பாடல் ஒன்றை பாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சாட்டை துரைமுருகனுக்கு ஆதரவாக அதே பாடலை பாடினார்.

இது குறித்து சீமான் மீது சென்னை பட்டாபிராம் காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளித்திருந்தார். ஆனால், அந்தப் புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து புகார் கொடுத்த நபர் மாநில தாழ்த்தப்பட்டோர் பழங்குடி ஆணையத்தில் முறையிட்டார்.

தற்போது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் சீமான் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அருந்ததியர் இனம் குறித்து இழிவாக பேசிய வழக்கு ஒன்றும் சீமான் மீது உள்ள நிலையில், தற்போது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்திலும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News