சென்னை மதாவரத்தில் பாட்டில்களில் தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த கடைக்கு புரதச்சத்து மருந்துகள் விற்பனை செய்ய மட்டுமே உரிமம் உள்ளது. ஆனால் சோதனையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
தாய்ப்பால் நிரப்பப்பட்ட 50 பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டு கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.