திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புது நாடு பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் உள்ளனர்.
புதூர் நாடு பகுதியில் இருந்து கீழூருக்கு 17 கிலோமீட்டர் பயணித்து ஏகலைவா உண்டு உறைவிட பள்ளிக்கு பள்ளி மாணவர்கள் சென்று வருகின்றனர்.
இன்று பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் 25 பேர் செய்முறை தேர்வு எழுதிவிட்டு திரும்பி வரும்பொழுது மகேந்திரா பிக்கப் வேனில் மிகவும் ஆபத்தான முறையில் மலை பாதையில் பயணம் செய்தனர்.இது போல் பயணம் செய்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அதே போல் இதற்கு உறுதுணையாக இருக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் ஓட்டுநர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலரின் கோரிக்கையாக உள்ளது.
இதேபோல் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு செம்பரை பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்லும் பொழுது பிக்கப்வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.