சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் காமாட்சி( 67). என்பவர் தனது கணவர் சம்பத் மற்றும் இளைய மகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று பொங்கல் பண்டிகை முன்னிட்டு காமாட்சி தனது கணவருடன் முகப்பேரில் உள்ள தனது மூத்த மகன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் மாலை குழந்தைகளுக்கு இனிப்பு வாங்கி வருவதாக கூறிவிட்டு அருகில் உள்ள கடைக்குச் நடந்து சென்ற போது முகப்பேர் திருவள்ளூர் மெயின் ரோடு அருகே அங்கு நின்றிருந்த அடையாளம் தெரியாத இருவர் தாங்கள் போலீஸ் என கூறி மூதாட்டியை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பின்னர் அவரிடம் இப்பகுதியில் அதிக திருடர்கள் தொல்லைகள் இருப்பதாகவும், இதுபோன்ற நகை அணிந்து வந்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்போம் எனவும், நகைகளை கழட்டி மடித்து பையில் வைத்து செல்லுமாறு அறிவுரை வழங்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி மூதாட்டி அணிந்திருந்த கையில் இருந்த செயின், வளையல் என் 5 சவரன் நகைகளை வாங்கி பேப்பரில் மடித்து கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
பின்னர் மூதாட்டி வீட்டிற்கு சென்று பார்த்த போது பேப்பரில் நகைகளுக்கு பதில் கற்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட மூதாட்டி காமாட்சி இதுகுறித்து ஜேஜே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய போலி போலீஸை தேடி வருகின்றனர்.