விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மழை பிடிக்காத மனிதன்.
இந்த திரைப்படத்தில், கேப்டன் விஜயகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக, சமீபத்தில் தகவல் வெளியானது.
தற்போது, கேப்டன் காலமாகிவிட்டதால், அந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்? என்று கேள்வி எழுந்தது.
அதற்கான பதில், தற்போது கிடைத்துள்ளது. அதாவது, இப்படத்தில், கேப்டன் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில், நடிகர் சரத்குமார் நடிக்க இருப்பதாக, கூறப்படுகிறது.