விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. இந்த படத்திற்கு பிறகு, பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்த இவர், தற்போது முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார்.
மேலும், தமிழ் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும், நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை சமந்தாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில், பாம்பு போன்று இருக்கும் கைக்கடிகாரத்தை அவர் அணிந்துள்ளார்.
இந்த கைக்கடிகாரத்தின் விலை குறித்து இணையத்தில் தேடினால், 45 லட்சம் ரூபாய் என்று தெரியவந்துள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.