தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில், பிசியாக நடித்து வருபவர் நடிகை சமந்தா. இவர், தற்போது சிட்டாடல் என்ற இந்தி வெப் தொடரில், அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை சமந்தா 10-வது படிக்கும்போது, அரையாண்டு தேர்வில் வாங்கிய மதிப்பெண் தொடர்பான புகைப்படம், இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில், அவர் அனைத்து பாடங்களிலும், அதிகமான மதிப்பெண்களையே பெற்றிருக்கிறார். குறிப்பாக, கணக்கு பாடத்தில், 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.