தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் தற்போது சிவகார்த்திகேயனின் 21-வது படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், சாய் பல்லவிக்கு திருமணம் நடந்து விட்டதாக கூறி, புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், இணையத்தில் ஷேர் செய்து வந்தனர்.
ஆனால், அதன்பிறகே, உண்மை என்னவென்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது, சாய் பல்லவியுடன் புகைப்படத்தில் மாலை அணிந்து இருப்பவர், எஸ்.கே 21 படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி என்பது தெரியவந்தது.
மேலும், எஸ்.கே 21 படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான், இது என்பதும் தெரியவந்தது.